நாமாவளி:
                           அகர முதலானே
                           பகவானே போற்றி !
                           ஆதி சிவனோடு
                           இணைந்த அப்பனே போற்றி
                           !
                           இகபரசுகம்
                           நல்கும் இறைவா போற்றி
                           !
                           ஈராறுகர
                           வேலா போற்றி !
                           உலகனைத்து
                           சக்திகளும் நீயே போற்றி
                           !
                           ஊண் உடம்பைத்தந்தவனே
                           போற்றி !
                           எழில் சித்தமல்லிவாழ்
                           தெய்வமே போற்றி !
                           ஏகாக்ஷர
                           ரூபனே போற்றி !
                           ஐம்புலன்
                           ஞானியே போற்றி ! 
                           ஒளிமயவானவனே
                           போற்றி !
                           ஓங்கார மூர்த்தியே
                           போற்றி !
                           ஒளஷத சித்தி
                           தரும் விருத்தா போற்றி
                           !
                           அஃதுலதை
                           இஃதுலக புவனா போற்றி
                           !
                            
                           (இயற்றியவர் : ஜோதிஷரத்னா
                           ராமன்)